Fotor0223213617

போருக்கு முடிவு உண்டு ஆனால் எமது போராட்டத்துக்கு முடிவில்லை.!!!

ஜெனீவா தொடக்கமும் இல்லை முள்ளிவாய்க்கால் முடிவும் இல்லை.!!!

ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழின அழிப்புக்கு,படுகொலைக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம் அணி திரள்வோம் காலத்தின் தேவை கருதி கை கோர்த்து நீதி கேட்போம் வாரீர் வாரீர்…!!!

ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் காலம் (14//03/2016) நேரம் 14:00 – 18:00 மணிமுதல் ஈகைப்போராளி முருகதாசன் திடல் ஆரம்பித்து ஐ.நா சபை முன்றல் வரை…!!!

எமது கடமை என்று நாம் உணர்ந்து ஜெனீவா திடலில் ஓன்று கூட வேண்டும் எங்கள் மக்களே வருக வருக.!!!

Fotor0223211332
அடிமை வாழ்வு இனி ஒருபோதும் வேண்டாம் என்று தமிழ் மக்கள் முடிவு செய்து முப்பத்தைந்து வருடங்கள் தாண்டிவிட்டது. சிங்கள தேசத்துடன் மீண்டும் ஈழத் தமிழர்கள் இணைந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்பதை சிங்கள ஆட்சியாளாகள் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலைகள் நிரூபித்துவிட்டது. இரக்கமற்ற சிங்கள இனவாதக் கொடூரத்தின் உச்சம் பாலச்சந்திரனால் உலகத்திற்குச் சாட்சியாக வழங்கப்பட்டுள்ளது.

நீதி தேவதை தமிழர்களுக்கு நியாயத்தை வழங்கியே தீரவேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள தேசத்தாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நீதியை விரைவு படுத்த வேண்டுமாயின், புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் போராட வேண்டும். தலைவர்களைத் தேடாத தொண்டர்களாக… தலைக்கு முடி தேடாத போராளிகளாக… தனக்கென்று எதுவுமே தேடாத தியாகிகளாகக் களத்தில் அணி சேர வேண்டும்.
எமக்கான போராட்டம் எங்கள் கைகளில்தான்… எமக்கான விடுதலையை யாராவது கையளிப்பார்கள் என்ற கனவான தீர்மானங்கள் இனியும் வேண்டாம்.

நாடுகளுடன் போரிடுவதற்குத்தான் ஆயுதங்கள் தேவை. உலகின் மனச்சாட்சியுடன் போர் புரிவதற்கு நியாயம் மட்டுமே போதுமானது. சத்தியமும், தர்மமும் எங்கள் பக்கம் உள்ளதால், இந்த ஜனநாயக மீட்புப் போரில் ஈழத் தமிழர்களது வெற்றி மட்டுமே சாத்தியம்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து:

1. பல தசாப்தங்களாக, இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011ல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலச்சியத்தில் இருந்து நாம் எப்போதும் மாறப்போவதில்லை…!!!

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”