மண்மேலே விழுந்தாலும்
விதைகள் தூங்காது
போர்க்களம் ஓய்ந்தாலும்
போர் ஓய்வதில்லையே…

எரிந்ததே எரிந்ததே
எம் தேசம் எரிந்ததே
மடிந்ததே மடிந்ததே
எம் உயிர்கள் மடிந்ததே

அயல் தேசங்கள் போட்ட
நாடகம் நெஞ்சை
விட்டு அகலாது
நம்பியது எம் தவறு
சதிகள் வலிக்கிறதே

தமிழரைதான் அழித்திடவே
உலகம் துடித்தது ஏனோ
உலகத்தின் போலி
காட்ச்சிகள் கண்ணை
விட்டு மறையாது
மாண்ட எம் மக்களின்
இரத்தம் கசிகின்றதே
போலிகள் எம்மை
சூழ்ந்திருந்தும் எம்
இலட்ச்சியம் ஓயாதே

பொறுத்திருங்கள்
வெகு விரைவில்
எம் நிலையை உலகம்
அறிந்திடுமே
மண்மேலே விழுந்தாலும்
விதைகள் தூங்காது
போர்க்களம் ஓய்ந்தாலும்
போர் ஓய்வதில்லையே…
=சிவா தமிழீழம்=