போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினரை அனுமதிக்க வேண்டாம் – கனடாவில் எதிர்ப்பு!

போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக தடை விதிக்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டிக் ரூடோவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்ள செல்லும் இலங்கை இராணுவத்தினரை அனுமதிக்க வேண்டாம் என்றே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சமாதான மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை இராணுவத்தினர் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கனேடிய பிரதமரின் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் இந்தக் கோரிக்கைக்கு கனேடிய பிரதமர் இன்னமும் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரும் இந்தக் கோரிக்கையை கனேடிய பிரதமர் ஜஸ்டிக் ரூடோவிடம் விடுத்துள்ளதாகவும் இலங்கை இராணுவத்தினக்கு விசா வழங்க வேண்டாம் எனவும் கோரியுள்ளார்.

போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இராணுவத்தினருக்கு எதிராக தடை விதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.