மகிந்தவை கைவிட்டு மைத்திரியிடம் கைகோர்க்கவுள்ள முக்கிய புள்ளிகள்!

09-10-15ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக உடைத்து புதிய கட்சியை ஆரம்பிக்க, எதிரணியில் உள்ள உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தயாரில்லை எனவும் மகிந்த – பசில் அணி கட்சியை உடைத்து தனிக் கட்சி  தொடங்கும் போது, இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய தயராக இருக்கின்றனர். இதனடிப்படையில், கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இவர்கள் படிப்படியாக கட்சியில் இணைந்து கொள்வார்கள் எனவும் மகிந்த அமரவீர   கருத்து தெரிவித்துள்ளார்.

(www.eelamalar.com)