மண்டையன் குழு. பகுதி-2
-முச்சந்தி முரளி

மானிப்பாய் பகுதிக்கு இந்தியன் ஆமியோடை ஈ.பி.ஆர்.எல்.எஃப்.இல நிசாம் எண்ட ஒருத்தன் பொறுப்பா இருந்தவன்.அவன் இணுவிலைச் சேர்ந்தவன். அதே நேரம் மானிப்பாய் பிரதேசத்துக்கு கப்டன். பாரத் அண்ணை இருந்தவர். பாரத் அண்ணையின் அணி இந்தியன் ஆமிக்கும் இந்த ஒட்டுண்ணிகளுக்கும் பெரும் குடைச்சல் குடுத்தவை.

இந்தியனையும் ஒட்டுக்குழுவையும் மாறி மாறி தொடந்து போட்டதில கடுப்பாகி ரெண்டு கோஸ்ற்றியும் பாரத் அண்ணை வீட்டை ரவுண்டப்பண்ணினவங்கள். அங்கை அவர் இல்லை எண்டு தெரிஞ்சதும் அவற்றை தங்கச்சிய இந்த நாய்கள் கடிச்சு குதறி கொண்டிட்டு அவற்றை குடும்பத்தயும் அடிச்சு முறிச்சு தங்கட வீரத்தை காட்டினவங்கள்.

அந்த நேரம் நிசாம், சுதாகர் எண்டு ரெண்டு பேர் இருந்தவங்கள் அவங்களுக்குள்ளை ஒரு போட்டி எப்போதும் இருக்கும். எத்தின பெட்டையளை ரேப் பண்ணிறது, எத்தின பேரை சுடுரதெண்டு நாளுக்கு நாள் செய்து கொண்டிருந்தவங்கள்.
அதோடை தங்கட உறுப்பினர் மார் விரும்பிற பெட்டையளை வீட்டை சுத்தி துவக்காலை சுட்டு,பெட்டைய கடத்திக்கொண்டு போய் கட்டி வச்ச வரலாறும் அங்கை நடந்தது.

கடைசியா பாரத் அண்ணைய துரோகி ஒருத்தன் காட்டிக்குடுத்து இந்தியன் ஆமியோடை நடந்த சண்டையில அவர் வீரச்சாவடைய, அவற்றை உடலை இந்த மண்டையன் குழு தாங்கள் அவரை சுட்டது போல ஒரு மொட்டை ஜீப்பில அவற்றை உடலை கட்டி ரோட்டில இழுத்துக்கொண்டு திரிஞ்சவங்கள்.

பிடிக்கிற சனத்துக்கு முதுகில அயன் போக்சாலை அயன் பண்ணிறது, மல வாசலுக்கை கொக்க கோலா போத்தலை அடையிறது, இது மட்டுமே ரெண்டு காதுக்கையும் ரெண்டு ரெனோல்ட் பேனைய வச்சிட்டு ஒரே நேரத்தில ரெண்டு சின்ன பலகையாலை ஓங்கி அடிப்பாங்கள் அதோடை அந்த நபர் துடி துடிச்சு சாவார். அப்பிடி சாகாதவைய மம்பட்டியாலை கொத்தி தலைய துண்டாக்குவான்கள். இதுகளை செய்த மண்டையன் குழு தான் இண்டைக்கு தாங்கள் தியாகிகள் எண்டினம்.