மழைவெள்ளம் கொக்குத்தொடுவாயில் மக்கள் இடம்பெயர்வு!

முல்லைத்தீவ மாவட்டத்தில் பெய்துவரும் மழைவெள்ளப்பெருக்கு காரணமாக கொக்குத்தொடுவாய் ,வடக்கு,கருநாட்டுக்கேணி கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயர தொடங்கியுள்ளார்கள்.

மழைவெள்ளம் காரணமாக வெள்ளங்கள் வீடுகளுக்குள் தங்கியுள்ளதால் மக்களின் இயல்புவாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

இதான் 06.12.18 நண்பகல் வரை 28 குடும்பங்களை சேர்ந்த 96 மக்கள் இடம்பெயர்ந்து கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

வீடுகளுக்குள் வாழமுடியாத நிலையில் குடிநீரினை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை மலம் கழிக்கமுடியாத நிலை உணவு சமைக்கமுடியாத நிலையில் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளார்கள் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவித உதவிகளும் இல்லாத நிலையில் வாழ்ந்துவருகின்றார்கள் கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலத்தில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் மக்களுக்கு உதவிகளை வழங்கவுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.