மார்ச் ஜ.நா தொடருக்கான தயார்படுத்தலில் ஸ்ரீலங்கா அரசு!

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜக்கியநாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடருக்கான தயார்படுத்தலில் ஸ்ரீலங்கா அரசு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுதுணையுடன் வடக்கில் செயற்பட்டு கொண்டிருப்பதை அவதானிக்கமுடிந்துள்ளது.

ஜக்கிய தேசியகட்சியின் தலைமையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்த்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு வடக்கில் அனர்த்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தென்னிலங்கை அமைச்சர்கள் கொடுக்கும் நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கையில் கூட்டமைப்பின் செம்புகள் மும்மூரமாக ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தாங்கள்தான் ஏதோ நிவாரணப்பொருட்களை வாங்கிக்கொடுப்பது போன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ளும் கூட்டமைப்பு எதிர்வரும் மார்ச்மாதம் நடைபெறவுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் இருந்து ஸ்ரீலங்காவை காப்பாற்ற முனைப்புடன் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க ஸ்ரீலங்கா அரசின் செயற்பாடாகவே தமிழ்மக்களை கொத்துக்குண்டுகள் போட்டு கொன்று குவித்த ஸ்ரீலங்கா படையினரே இன்ற அவர்கள் கரங்கள் கொண்டு கொடைகளை வழங்கும் மனிதாபிமானம் உள்வர்களாகவும் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களாகவும் செயற்பட்டு கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

படையினர் நல்லசேவையினையும் அதனை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்மக்கள் விருப்பத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு தேவையான வற்றை அரசிடம் இருந்து பெற்றுக்கொடுக்கின்றது என்று காட்ட முனையும் செயற்பாடானது ஸ்ரீலங்கா அரசும் அரச படைகளும் ஒரு மனிதாபிமான அமைப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றதை எடுத்துக்காட்டியுள்ளது.

இவற்றுக்கு மேலாக வடகில் வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளான தமிழ் மக்களுக்கு பல உதவிகளை வழங்குவதாக படையினர் மேற்கொண்டாலும் தமிழர்களின் உரிமையினை கொடுத்துவிடப்பேவதில்லை என்பது உண்மை

எதிர்வரும் மார்ச்மாதம் ஜக்கியநாடுகள் சபையில் ஸ்ரீலங்காவிற்கு வரப்போதும் ஆபத்தினை தணிக்கும் வகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் அமைந்துள்ளது இவ்வாறான மனிதபிமான பணிகளை செய்வதன் ஊடாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் சிபார்சினை பெற்று ஸ்ரீலங்கா காப்பாற்ப்பட்டும் அதற்கான செயற்பாடுகள் இனிவரும் காலங்களிலும் தாயகத்தில் வீச்சாக்கப்படும் என்து உண்மை.

ஏமாளிகளாக வாக்காளர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்து திண்ணம்!