மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள்…!
ஒரு பகிர்வு-22

லீமா வீரச்சாவாம் என்ற செய்தி போராளிகளாலும் மக்களாலும் ஏற்றுகொள்ள முடியாத உண்மையாகிறது.செய்திய கேள்விபட்டு மக்கள் கண்ணீர் வடித்தார்கள்.

ஊடகங்களிலும் இணையதளங்களிலும் இந்த செய்தி பின்னர் வெளியாகி உலகெங்கும் இருந்து அவரது இழப்பின் வேதனையை பகிர்ந்து கொண்டிருந்தனர் தமிழ் மக்கள்.லீமாவின் இழப்பினால் விடுதலை புலிகள் மட்டுமல்ல ஆறாத்துயரில் அன்று வன்னி மக்களும் ஆழ்ந்தார்கள்.

எங்கும் சோக கீதங்கள் இசைக்கவிட பட்டன.புலிகளின் குரல் வானொலி சோகத்தை கொட்டியது.வீதிகள் எங்கும் சிகப்பு மஞ்சள் கொடிகள் கட்டபட்டு லீமா அவர்களின் படங்கள் வைக்கபட்டு வணக்க நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகி இருந்தன.

விடுதலை புலிகளின் கட்டமைப்பிற்குள் அமைவாக லீமா அவர்களின் வித்துடல் தியாகசீலம் கொண்டுசெல்ல பட்டு அங்கு உடல் துய்மையக்கபட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டு தமிழீழ தேசிய தலைவரின் பார்வைக்காக வித்துடல் செல்கிறது.

அங்கு விடுதலை புலிகளின் அனைத்து தளபதிகளும் இருந்தார்கள்.அங்கு தமிழீழ தேசிய தலைவர் மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செய்ததை தொடர்ந்து தளபதிகள் பொறுப்பாளர்கள் வீரவணக்கம் செலுத்தினார்கள்.இதன்பின்பு வித்துடல் படைசார் வீர வணக்கத்திற்கும் மக்கள் வீர வணக்கத்திற்கும் வைக்க படுகிறது.இதற்காக ஒழுங்கமைக்கபட்ட இடங்கள் தெரிவுசெய்யபட்டு இரகசியமான ஏற்பாடுகள் நடந்தேறுகின்றன.

முள்ளியவளை நீராவி பிட்டியிளிருத வீட்டிலிருந்து எடுத்து செல்லப்பட்டு ஒட்டிசுட்டான் வழியாக மாங்குளம் சென்று பின்பு மல்லாவி சென்று அதன் உடாக அக்கராயன் சென்று இஸ்கந்தபுரம் சென்று ,கோணாவில் ,கிளிநொச்சி ,பரந்தன் ,விஸ்வமடு ,உடையார்கட்டு ,புதுக்குடியிருப்பு ,முல்லைத்தீவு வழியாக மீண்டும் வித்துடல் முல்லியவளையினை சென்றடைந்து.லீமா அவர்களின் வித்த்டலினை பார்ப்பதற்காக மக்கள் வீதிகளில் மலர் மலைகளுடன் குவிந்து நின்றார்கள்.இரவிரவாக வித்துடல் நகர்ந்து சென்றது இரவிரவாக வீதிகளில் காத்திருந்த மக்கள் வித்திடளுக்கு வணக்கம் செலுத்தினார்கள்.

சென்ற இடங்களிலெல்லாம் சிறப்பு வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.இதில் தளபதிகள் பொறுப்பாளர்கள் போராளிகள் மக்கள் ஆகியோர் வீரவணக்கம் செலுத்தி உரை நிகழ்த்துகிறார்கள்.

தழிழீழ விடுதலைபுலிகளின் துறைசார் பொறுப்பாளர்கள் கட்டளைத்தளபதிகள் பொறுப்பாளர்கள் அனைவரும் வீரவனக்கத்தில் லீமா அவர்களின் போராட்ட வரலாற்றினை எடுத்து கூறினார்கள், லீமா அவர்களின் வீரவணக்கம் வன்னியில் நடந்தேறி வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் விதைக்க பட்டது.இந்த நிலையில் அனைத்து உயர்மட்ட தளபதிகள்,பொறுப்பாளர்கள்,போராளிகள் ,மக்கள் என ஆயிரகனக்கனோர் பங்கேற்று இருந்தார்கள்.முதற்தடவையாக இத்தனையாயிரம் பேர்களால் நிறைந்திருந்தது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்.

எல்லா போராளிகளையும் விம்மி அழவைத்துவிட்டு லீமா சென்றுவிட்டார் ..அவர் சென்றுவிடவில்லை ஒவ்வொரு தமிழ் மக்கள் மனங்களிலும் ஒவ்வொரு போராளிகளின் மனங்களிலும் என்றும் நிறைந்திருக்கிறார்.அவர் கொடுத்த நினைவை சுமந்தபடி அவர் கொடுத்த விடுதலை உணர்வை சுமந்தபடி அவர் வளர்த்துவிட்ட போராளிகள் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் அவரது இழப்பு போராட்டத்திற்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை நாங்கள் பின்னர் கண்டுகொண்டோம் அதனை தொடர்ந்து வரும் தொடரில் பார்ப்போம் **********
பால்ராஜ் அன்னையின் இழப்பால் சோர்ந்து போயிருந்த உள்ளங்களுக்கு உற்சாகத்தை உட்டிய பெரும் வெற்றியை பெற்றுதந்த தாக்குதலாக சிறுத்தீவு தாக்குதல் அமைந்திருந்தது.ஈருடக படையணியின் இந்த நீண்ட துரம் கடலில் சென்று தாக்குதல் நடத்திவிட்டு திரும்பி வருகின்ற வெற்றி செய்திகள் தமிழ் மக்களுக்கு உற்சாகத்தை கொடுத்த போதும் அது இந்தியாவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.கடற்புலிகளின் தாக்குதல்களை அவதானித்து வந்த இந்திய இவ்வாறன தாக்குதலில் மேலும் ஆழமாக அவதானிக்க தொடங்கியது.

(30 ) கிலோமீற்றர் துரம் கடலில் சென்று தாக்குதல் நடத்திவிட்டு திரும்பும் கடற்புலிகளால் (36 ) கிலோ மீற்றர் கடல் எல்லைய கொண்ட இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான கரற்பரப்பில் எவ்வாறான தாக்குதலை நடத்த முடியும் என்று அவர்கள் (வேண்டாத) கற்பனைகளை வளர்த்திருக்க வேண்டும்.

இதன் காரணமாகத்தான் இந்திய இலங்கை கடல் எல்லையில் குண்டுகளை சிறிலங்கா கரற்படையினர் விதைத்து வைத்துள்ளதாக வெளியிடபட்ட செய்திகளை கொள்ள முடியும்.

அனால் சிறுத்தீவு கடற்படை தளம் தாக்குதல் மூலம் யாழ் குடாவின் மீது அதிக கண்காணிப்பு நடவடிக்கையை சிறிலங்கா கடற்படையினர் குவிப்பார்கள் என்ற நோக்கத்துடன்தான் இந்த தாக்குதல் முக்கியமாக விடுதலை புலிகளால் நடத்த பட்டது .

அதாவது தமது ஈருடக படையனிக்ககான பயிற்ச்சியை வழங்குவதுடன்,இராணுவத்தை திசை திருப்பும் அல்லது அவர்களின் வளங்களை இன்னுரு பக்கத்திற்கு இழுத்து செல்லும் ஒரு நடவடிக்கையக்கவும்தான் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டது.

அனால் பணியில் தேள் கொட்ட ,தென்னையில் நெறி கட்டிய கதையாக ஈருடக படையணியின் தாக்குதலால் இந்திய தேவையில்லாமல் தனது அச்சத்தை அதிகரித்து கொண்டது.அல்லது அவ்வாறு காட்டிக்கொள்ள அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டது.

அனால் உண்மை அதுவல்ல சமாதன காலத்திற்கு பின்னர் சிறிலங்கா தமது படைவலுவை அதிகரிக்க தொடங்கிய நிலையில் அதனை பலப்படுத்தும் உதவிகளை இந்திய வழங்கியிருந்தது.குறிப்பாக கடற்புலிகளை கட்டுபடுத்தும் அவர்களின் செயற்பாடுகளை கண்டறிந்து உளவு சொல்லும் செயற்பாடுகளை இந்திய போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஆரம்பித்து விட்டது.

இந்தியாவின் இந்த சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளையும் அவர்களின் விடுதலைபுலிகளை அளிப்பதற்கு உதவிவரும் செயற்பாடுகளையும் போர் ஆரம்பித்ததன் ( சமாதானத்திற்கு ) பின்னர் அம்பலபடுத்திய பெரும் பங்கு ஈருடக படையணிக்கே முதலில் உண்டு .

யாழ்குடா மீதான இவர்களின் தாக்குதலே இந்தியாவின் இராணுவ உதவிகளை அம்பலபடுத்தி வைத்தது எனவே ஈருடக படையணியின் தாக்குதல்களை தடுக்கவும் கட்டுபடுத்தவும் மேலும் பல உதவிகளை இந்திய வழங்கியிருந்தது.

அத்துடன் வான் தாக்குதல்களை கண்காணிக்க வவுனியாவிலும் தமிழகத்தின் கரையோரங்களிலும் கண்காணிப்பு நிலைகளை உருவாக்கியிருந்ததன் மூலம் விடுதலைபுலிகளின் கடல் வான் தாக்குதலை தடுக்கும் முழுமையான போர்ப்பை இந்திய எடுத்திருந்தது என்றே கொள்ளாம்.

விடுதலைபுலிகளின் பலம் வாய்ந்த இரு படையணிகளை கட்டுபடுத்தும் பொறுப்பை இந்திய நேரடியாக பொறுப்பேற்று இருந்ததை இதன் மூலம் புரிந்து கொள்ளாலாம் இவை வெளியில் தெரிந்தவை.இவ்வரி விட வெளியில் வெளிவராத உண்மைகள் இன்னும் அதிகம்.

போராட்டத்தின் பின்னடைவிற்கு இவைகள்தான் காரணங்கள் எனினும் இறுதிவரை போராடும் முடிவில் விடுதலைப்புலிகள் இருந்தார்கள்.கடைசி போராளி இருக்கும் வரை போராட்டம் தொடரும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.இதனால்தான் போர் முல்லிவாய்களில் முடியும்வரை அவர்கள் போராடினார்கள்.

யாழ்குடாவின் தீவுகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்திய ஈருடக படையணியின் அடுத்த தாக்குதல் மன்னார் கடற்படை தளங்கள் மீது செல்கிறது வன்னியின் மேற்கே மானார் திருக்கீதீச்வரம் தொடக்கம் விடத்தல்தீவு நாச்சிகுடா மிக நீண்ட ( அண்ணளவாக )(80 ) முதல் (100 ) கிலோ மீற்றர் வரையான கடற்பரப்பு விடுதலைபுலிகளின் ஆளுகைக்குள் காணபட்டது .

விடத்தல் தீவில் விடுதலைபுலிகளின் கடற்படைத்தளம் ஒன்றும் காணப்பட்டது .அப்போது மன்னார் மாவட்டத்தின் கட்டளைதளபதியாக அச்சுதன் இருந்தார் .அவரே அணியின் வேவு நடவடிக்கையின் கீழ் மன்னார் சிறுப்பிட்டி கடற்படைத்தளம் மீதான அடுத்தகட்ட தாக்குதலுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தொடரும்…