மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள்…!
ஒரு பகிர்வு-25

அந்தளவிற்கு இந்த எறிகணைகள் ஏவப்படுவது தெரிந்தாலே படையினர் களமுனைகளை விட்டு தப்பியோடும் நிகழ்வுகளும் நடந்தன .இந்த இரண்டு எறிகணைகளும் இழுத்து நகர்த்தி செல்லகூடிய வகையில் இரண்டு தண்டவாள துண்டுகளை கொண்டு இதற்கென வடிவமைக்கபட்ட உளவு உயந்திரத்தில் வைத்துதான் ஏவப்பட்டன.

வேகமாக கொண்டு நகர்த்தகூடிய வகையில் சண்டியன் சமாதனம் எறிகணையின் ஏவுதளம் இருந்தது ,இந்த எறிகணைகள் ( 1000 ) மீற்றர் (சுமார் ஒரு கிலோமீற்றர்) தூரம்வரை சென்று தாக்கவல்லது சமாதனம் எறிகணையின் நிறை சுமார் நுறு கிலோவிற்கும் அதிகமாக இருக்கும் ,அதனை துக்கி போடுவதற்கு குறைந்தது இருவர் என்றாலும் வேண்டும்.

இதனை இயக்கம் இடத்தில் இயக்குபவர்கள் நிக்கமட்டார்கள், சுமார் (50 ) மீற்றர் துரத்தில் நின்றுதான் இயக்கவைப்பர்கள்,இந்த எறிகணை செலுத்தியை இயக்க சுமார் ஆறு பேர்கள் தேவை .ஆதாவது இந்த எறிகணைய பற்றி சொல்லுவதானால் அதன் வடிவம் பாரிய ஏவுகணை போன்று இருக்கும் பின்பக்கத்தில் ஆறு மல்ரி பெறல் எறிகணைகள் பொருத்தபட்டு இருக்கும் ,இந்த மல்ரிபெரல் எறிகணைகள்தான் முன்னிருக்கும் எறிகணைய தாங்கிசெல்லும்.

அந்த இலக்கில் வீழ்ந்து வெடிக்கும் போது பாரிய சத்தம் கேட்கும் ,அதன் துண்டுகள் கூட படையினரில் படத்தேவையில்லை இது வெடிக்கும் போது எழும் சத்தமே படையினரை கொன்றுவிடும் .இதன் நேரடி தாக்கம் சுமார் (50 ) மீற்றர் சுற்றுவட்டத்தை அழிக்கும்.இதுதான் சமாதனம் என்று சண்டைக்களங்களில் போராளிகளால் பேசப்படும் எறிகணை .

சண்டியனும் இதே வடிவம்தான் அனால் அதன் நிறை கொஞ்சம் குறைவு (65 ) கிலோ கிராம்தான் அத்துடன் சமாதனம் போன்று இது படையினருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது .

அனால் படையினர் இதன் பெயரை சொல்லி அச்சப்படும் அளவிற்கு அதன் தாக்கம் இருந்தது,இந்த எறிகணைகள் முதன் முதல் முகமாலை படையினர் மீதுதான் பரீச்சித்து பார்க்கபட்டது .அதன் பின்னர் முகமாலையில் நின்ற படையினருக்கு சமாதனம் சண்டியன் என்றாலே போதும் அச்சத்தில் உறைந்து விடுவார்கள் .

இந்த இரண்டும் எதிரிக்கு பாரிய இழப்பினை கொடுத்து விடுதலை புலிகளுக்கு பல வெற்றி தாக்குதல்களுக்கு காரணாமாக அமைந்தது. இதனால் இந்த எறிகணை உற்பத்தி அதிகரிக்கபட்டு மன்னார் ,வவுனியா ,மணலாறு ,போன்ற களமுனைகளுக்கும் அனுப்பிவைக்க படுகின்றது.

இந்த எறிகணைகளுக்கான வெடிமருந்துகளை சிறிலங்கா வான்படையே தந்துதவியது ,கிபீர் ஏவி வெடிக்காத குண்டுகளில் இருந்தே இவற்றுக்கான மருந்துகள் பெறப்படுகின்றன.,இதை போன்று கடலில் கரும்புலி படகுகளின் வெடிமருந்து வடிவங்கள் மாற்றி அமைக்கபட்டு எதிரிக்கு பலத்த இழப்பில்லை ஏற்படுத்துகின்றார்கள்.இதே வேலை அன்று விடுதலை புலிகளுடன் (சினைப்பர் )எனப்படும் குறிசூட்டு துப்பாக்கி பெருமளவில் இருக்கவில்லை .

இதனால் அந்த தேவைய ஈடுசெய்ய எ,கே (47 ) துப்பாக்கிகளுக்கு தொலை நோக்கிகளை பொருத்தி புதிய முறையிலான சினைப்பர் துப்பாக்கிகள் உருவாக்க பட்டன ,ஆதாவது குறுகிய துரத்தில் நின்றுகொண்டு எதிரியை குறிபார்த்து சுடும் வகையிலும் இலகுவாக கொண்டுசெல்ல கூடிய வகையிலும் எ ,கே (47 ) துப்பாக்கி விடுதலை புலிகளால் வடிவமைக்க படுகின்றன.

இந்த எ,கே ( 47 ) விடுதலை புலிகள் செண்பகம் என பெயரிட்டிருந்தனர் .இதற்க்கான ரவைகள் கூட சாதாரண எ ,கே (47 ) பாவிக்கப்படும் ரவைகள் பயன்படுத்த படவில்லை ,கவசதுளைப்பி ரவைகள் பயன்படுத்த படுகின்றது .

இவ்வாறன துப்பாக்கிகள் ஏராளமாக வடிவமைக்க படுகின்றன .சினைப்பர் துப்பாக்கிகளுக்கு வளிதிறத்தல் ஏராளமான சினைப்பர் அணிகள் உருவாகின்றன.தளபதி தீபன் அவர்களின் கீழ் கிளாலி முகமாலை நாகர்கோவில் தளங்களில் சினைப்பர் அணிகள் உள்நுழைந்து ஏரளாமான இராணுவத்தினரை கொன்றிருந்தனர்.

இதே போன்று மன்னார் களத்தின் தளபதி பானுவின் கட்டமைப்பின் கீழ் சினைப்பர் அணிகள் செயற்பட்டு எதிரிக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தியிருந்தனர்.இவ்வாறு விடுதலைபுலிகளின் சினைப்பர் அணிகள் சண்டைகளின் போது உடுருவி நடத்திய பல தாக்குதல்களை வியப்புட்டுபவை .சிறிலங்கவிர்க்கு சண்டைகளங்களில் பாரிய இழப்பினை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு சினைப்பர் அணிக்கும் உண்டு .

சிறிலங்கா படைத்தரப்பே இந்த சினைப்பர் அணியால் ஏற்பட்ட இழப்பகள் குறித்து கடந்த காலங்களில் தெரிவித்திருந்தமை இங்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இதேவேளை அன்றைய காலங்களில் சிறிலங்கா ஆழ உடுருவும் படையணியின் தாக்குதல்கள் வன்னி பெருநிலபரப்பில் அதிகரித்து இருந்தன.இதனால் தளபதிகளுக்கு பொறுப்பாளர்களுக்கும் எதிரியின் கிளைமோர் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு வழங்க அவர்கள் பயணம் செய்யும் வாகனங்கள் சன்னங்கள் துப்பாக்கி ரவைகள் துளைக்காத வண்ணம் பாதுகாப்பாக இரும்பு தகட்டினால் வடிவமைக்கப்பட்டு பரீச்சித்து பார்க்கபட்டு துருப்புக்காவி என பெயர்சொல்லி அழைக்கபட்டு ,பெரும்பாலான தளபதிகள் ,படையணி போராளிகளை ஏற்றி இறக்குவதற்கு வழங்க படுகின்றது.

இதே வேளை பாதைகள் மூடப்பட்டதனால் உணவு பொருட்களுக்கான நெருக்கடிகள் அதிகரிக்க தொடங்கின ,அத்துடன் சில களமுனைகளுக்கு அருகில் சமைக்கமுடியாத அளவிற்கு சண்டை தொடர்ச்சியாக உக்கிரமாக நடைபெற்று கொண்டிருந்தது ,சமைத்துசென்று உணவுகளை வழங்கமுடியாத களமுனைகளுக்கு (15 ) நாட்களுக்கு ஏற்ற வகையில் உலருணவு பொருட்கள் தயாரிக்கபட்டு பொதி செய்யபட்டு களமுனை போராளிகளுக்கு அனுப்பிவைக்க படுகின்றன ,இதேவேளை மருத்துவத்துறை ஏராளமான மருத்துவர்களை உருவாக்கியிருந்தது .

இதனால் விடுதலை புலிகளின் மருத்துவ பிரிவும் விரிவாக்கம் பெற்று இருந்தது ,மருத்துவ போராளிகளில் பலர் பொதுமக்களின் மருத்துவ மனைகளில் இணைந்து மக்களுக்கு சேவையாற்றி தங்கள் அனுபவ அறிவை வளர்த்துகொண்டிருன்தனர்.

விடுதலைபுலிகளின் மருத்துவ பிரிவால் ஏராளமான சத்திரசிகிச்சை முகாம்கள் அமைக்கபட்டு இருந்தன ,களமுனைக்கு அருகில் கூட சத்திரசிகிச்சை முகாம்கள் அமைக்கபட்டு காயமடையும் போராளிகள் காப்பற்ற படுகின்றார்கள் .,போராளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதை அடுத்து நிர்வாக அலகுகள் விடுதலைபுலிகளினால் அதிகரிக்க படுகின்றது .

இவ்வாறு விடுதலைபுலிகளின் கட்டுமானங்கள் வளர்ச்சியான கட்டத்தில் இருக்கும்போதுதான் தேசியத் தலைவரால் புதிய தாக்குதல் திட்டம் ஒன்று வகுக்க படுகிறது

தொடரும்…