மாவீரர்கள் எம் தேசத்தின் சூரியப்புதல்வர்கள்

மனித வரலாறு அமைதியானதாக ஒருபோதும் இருந்தததில்லை, ஆக்கிரமிப்புகளும், இனஅழிப்புகளும் அவற்றிற்கெதிரா போருமாக தொடர்ந்த வண்ணமுள்ளது.

ஐந்து நுாற்றாண்டுகளாக அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்தும், இன
அழிவிலிருந்தும் எம்மை பாதுகாக்க இன்று நாம் போராடவேண்டியுள்ளது. இந்த
வீ ர சுதந்திரப் போராட்ட வரலாறு வெறும் உணர்வுகளால் மட்டும் பதியப்படவில்லை , இது மாவீரர்களின் அளப்பரிய தியாகங்களாலும் உயிர்க்
கொடைகளாலும் பதியப்பட்டுவருகின்றது. எம் மண் விடிவிற்காக தமமை
அர்ப்பணித்தவர்கள் எதிரியிடமிருந்து எம்மை விடுவிக்க தம்மை எமக்காக
அர்ப்பணித்தவர்கள். வெறும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதவை இவர்களின்
தியாகங்கள். இவற்றை நாமும் நமது தலைமுறைகளும் மறந்துபோவோமாயின்
மீண்டும் அடிமை இருளுக்குள் தள்ளப்படுவோம்.

உலகிற்கு ஒளி வழங்கும் சூரியன் போல், ஈழத்தமிழினத்திற்கு சுதந்திர ஒளியை பெற்றுத்தந்தவர்கள். இவர்களின் தியாகங்கள், அர்ப்பணிப்புகள்
வெறும் நினைவுகளாக எம்முள் மட்டும் வாழவைக்காது இனிவரும் சந்ததிகளையும் பாதுகாக்கவும், அவர்தம் நினைவில்நிற்கவும் வைப்பதுமே நாம் இவர்கள் சுமந்த இலட்சியத்தை நிறைவு செய்யும் கடன், இவர்கள் நினைவும் செயலும்
நம்முள் நிறைந்திருக்கும் நிதமும் இவர் பெயர் உச்சரிப்போம் ,

ஆம் மாவீரர்கள் எம் தேசத்தின் சூரியப்புதல்வர்கள்

“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்”

அணைத்துலகச் செயலகம்.
தமிழீழ விடுதலை புலிகள்
வெளியீடு :சுரியப்புதல்வர்கள் நூல் 1999
மீள் வெளியீடு :வெளியீட்டுப்பிரிவு அனைத்துலகத் தொடர்பகம்,