மாவீரர் துயிலுமில்லங்களை புனரமைக்க புலம்பெயர் உறவுகள் உதவவேண்டும்!

அம்பாறை மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை புனரமைத்து நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் உறவுகள் உதவிகளை வழங்க வேண்டும் என தரவை மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு செயற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 15ஆம் திகதி தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முதற்கட்ட சிரமதானப் பணிகளிலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அந்தக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு தரவை மாவீரர் துயிலுமில்லம் மற்றும் மாவடிமுன்மாரி துயிலுமில்லம் ஆகிய இரண்டு துயிலுமில்லங்களிலும் மிகவும் சிரமத்தின் மத்தியில் மக்களிடமிருந்தும் போராளிகளினதும் சேகரிக்கப்பட்ட பணத்தின் மூலமாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியதாக தரவை மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு செயற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த வருடம் பந்தம் கொழுத்துவதற்காக காட்டில் தடிகள் வெட்டியே பயன்படுத்தியிருந்தாகவும் இந்தமுறை கம்பிவலைத்து தீப்பந்தங்கள் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அந்த குழுவின் உறுப்பினர் கணேசன் பிரபாகரன் தெரிவித்தார்.

இதனால் மாவீரர் துயிலுமில்லங்களை புனரமைத்து நினைவேந்தல் நிகழ்வு நடாத்துவதற்கு புலம்பெயர் தேசத்தின் உறவுகள் உதவிகளை வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.