1800474_298628193679501_5951588028951338081_n

உன்னால்தான் ஒரு இனத்தின்
புரட்சி வெடித்தது..அது மீண்டும்
உன்னால்தான் வெடிக்க வேண்டும்
எழுந்து வா..எம்மினத்தின் சூரியனே!

எரிமலைக் குழம்பாக
எட்டுத் திக்கும் சுட்டுப் பொசுக்கு..
விரி கடல் அலையாகி
வீறுடன் பொங்கி எழு..!

இனமான விடுதலையே
இனிஎம்மை வாழ வைக்கும்..
தணலாகி எரித்துவா ..மீண்டும்
தமிழினத்தை அழித்தவரை..!

புலியாகிப் பாய்ந்து வா ..
பூமிக்குள் மீண்டும்
பூகம்பம் பிறக்கும்..
மலையாகி நகர்ந்து வா..
மனுக் குலமே நடு நடுங்கும்!

ஏழு வருடங்கள்
மௌனித்துவிட்டன..உன் ஆயுதங்கள்..!
மீண்டும் அது முழங்கட்டும் ..
ஏழு வருடங்கள்
ஓய்ந்திருந்தது உன் புலிப்பாய்ச்சல்..
மீண்டும் அது தொடரட்டும்!

ஏழு வருடங்கள் ஓங்கியிருந்தன..
எதிரியின் அழிவுக் கரங்கள்..
மீண்டும் அதைத் துண்டு துண்டாக்க
நீதான் வேண்டும்..!

உன்னால்தான் ஒரு விடிவெள்ளி
எமது மண்ணில் பூத்தது..
உன்னால்தான் ஒரு இனத்தின்
புரட்சி வெடித்தது..அது மீண்டும்
உன்னால்தான் வெடிக்க வேண்டும்
எழுந்து வா..எம்மினத்தின் சூரியனே!