முள்ளிவாய்க்காலில் தங்கம் தேடி தொடர்கிறது அகழ்வு நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து நேற்று மாலை அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் இராணுவம் பொலிஸ் விசேட அதிரடிப்படை கடற்படை ஆகியோர் இணைந்து இந்த அகழ்வுப்பணியினை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இப்பணி நடைபெற்றது. தொடர்ந்து அகழ்வு பணிக்கான இயந்திரத்தின் அளவு போதாமையினால் பெரிய ரக ஜே.சி.பி இயந்திரத்தை ஒழுங்கு செய்துவிட்டு வருமாறு நீதிபதி பணித்துள்ளார்.

அத்தோடு தோண்டப்பட்ட இடம் மீண்டும் மூடப்பட்டு பிறிதொரு தினத்தில் இந்த அகழ்வு பணி தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.