Fotor0517212526

முள்ளிவாய்க்கால் நெருப்பு காலமெல்லாம் தீ மூட்டும்!Fotor0517212746

வீரர்கள் எதிரில்
எதிர் நிற்க முடியாத
கோழைகள்..

விரல்
விட்டு எண்ணுகின்றார்
உயிர் விட்ட
வித்துடல்களை

ஆயுதம் இல்லா
போராளிகளை
கைகளை
பின்னால் கட்டி
விலங்கிட்டு
அச்சத்தோடு
மிச்ச உயிர் ஏதுமின்றி
வதைத்து
சிதைத்து
புணர்ந்து
குருதி குடித்து
சதைகள் அறுத்து
தின்று புசித்து
ஈற்றில்
முதுகில்
சுட்ட பேடிகள்!

சாவிலும்
ஓசையின்றி
தாய் மண்ணையே
வணங்கிய
மறவரை
கொன்றோம்
வென்றோம்
என
கூத்தாடிய
காட்டேரிகளே..

மாவீரத்தை
மரணங்கள்
தின்ன முடியாது!

அறுக்க அறுக்க
நசுக்க நசுக்க
வதைக்க வதைக்க
வலிக்க வலிக்க
மீண்டு எழும் இனம் இது!

பிணங்கள் தானே
என துணிந்து
நின்றீர்கள்
புலி வீரர்கள்
உடல்கள் முன்னே….

கொன்ற பின்னும்
புணர்ந்து
வீரம் கொண்ட
பெண்களை
ஒடுக்கினோம்
என
ஈனத் தனத்தில்
வேட்கை தணித்தீர்…

நெருப்பெடுத்தன
எங்கள்
விழிகள்..

கொதித்தெழும்
கொதிக்களத்தில்
புது உயிர்கள் பிறக்கும்!

மூடரே
வீரத்தின்
பெரு நெருப்புகள்
அணையா தீயாய்
ஒவ்வொரு
தமிழனுக்குள்ளும்..

கனன்று கனன்று
மூண்டு
எழ

நீங்களே
விடுதலைக்கு
நீர் வார்கின்றீர்…

விடுதலை தீ
அணையாமல்
நெருப்பெடுக்க
முள்ளிவாய்க்கால்
நெருப்பு
காலமெல்லாம் தீ மூட்டும்!

(www.eelamalar.com)

(செந்தமிழினி பிரபாகரன்)