மைத்திரிபால சிறிசேன நாள லண்டன் விஜயம்

பொதுநலவாய ராஜ்ய தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (15) லண்டன் விஜயம் செய்யவுள்ளார்.

இந்த மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை லண்டனில் நடைபெறவுள்ளது. பொதுவான எதிர்காலம் எனும் தலைப்பில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது பிரிட்டன் பிரதமர் திரேஷா மே அம்மையாரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.  அத்துடன், மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இராஜ்ஜிய தலைவர்கள் பலருடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.