மைத்திரியின் கடைசி சுதந்திர தினமா இது?

இன்று இலங்கை 69 வது  சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மகிந்தவின் அரசியல் பிரவேசமும், சமீபத்திய சீன பயணமும், இலங்கையில் அடுத்தவருடத்துக்குள் ஆட்சி கவிழ்ப்பு ஏதும் நடைபெறலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மகிந்தவின் முன்னைய ஆட்சி குறித்தும், அவருடைய குடும்ப உறுப்பினர்களான கோத்தபாய ராஜபக்ஸ, சிரந்தி ராஜபக்ஸ,  நாமல் ராஜபக்ஸ மற்றும் யோசித ராஜபக்ஸவின் குற்றங்களை நிரூபித்து அவர்களை சிறையில் அடைப்பதற்கான முழுமையான ஆதாரங்களை நல்லாட்சி அரசாங்கம் திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இதனை முன்கூட்டியே அறிந்து  வைத்துள்ள  மகிந்தவின் குழாமினர் ஆட்சியினை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என முழுமையாக களமிறங்கிவிட்டார்கள் என்பதே உண்மை என சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றது.

ஆகவே மைத்திரியின் தலைமைத்துவம் அடுத்த வருடம் தொடருமா என்பதே தற்போதைய கேள்விக்குறியாகவிருக்கின்றது.

ஆகவே அடுத்த வருடமும் ஜனாதிபதி பதவியிலிருந்துக்கொண்டே தற்போதைய ஜனாதிபதி சுதந்திர தினத்தை கொண்டாடுவாரா என்பது  அரசியல் விமர்சகர்களின் எதிர்கூறலாக அமைந்துள்ளது.

பொருத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கபோகின்றது என்பதனை……?