யார் அநாதைகள் நாங்கள் உலகம் போற்றிய தலைவன் வழர்த்த பிள்ளைகள்.

பத்து மாதம் சுமக்கவில்லை
30 வருடம் எமை தன் கைகளில் ஏந்திய தாய்”இருக்கின்றான் எமக்கு நாங்கள் அநாதைகள் அல்ல…!!

நீங்கள் இல்லை என்றவுடன் எதிரி மதிப்பதைவிட எம் இனமே எம்மை மதிப்பது கிடையாது…!!

நாங்கள் அநாதை என்ற பட்டத்தை சொல்லாம் குத்திக்காட்டுகின்றது இந்த சமுதாயம்.

*எவர் எதை சொன்னாலும் உங்கள் தோழ் சாய்ந்த பெருமை எமக்கு உண்டு உங்கள்.
*உங்கள் விரல் பிடித்து நடந்த பெருமை எமக்கு உண்டு.
*உங்கள் மடியில் தவன்ட பெருமை எமக்கு உண்டு.
*ஒரு போராளிக்கு இருக்கும் சலுகையைவிட எமக்கு தந்த உரிமை வேறு எவறு உண்டு.
*எல்லாத்திற்கும் மேல் எனது பிள்ளைகள் என்று கூறுவது யாருக்கு பெருமை.

அவ்வாறு வழர்ந்துவந்த எமை இன்று இந்த சமுதாயம் அநாதைகள் என்று சொல்லாமல் சொல்வது கவளைக்குறியதாக இருக்கின்றது.

மாமா உங்களின் தத்துவத்தில் வழர்ந்தவர்கள் நாம்.
உங்களின் பிள்ளைகள் நாம்.

எல்லாவற்றையும் விட தம்பி பாலச்சந்திரனாக இருக்கட்டும்
அண்ணா சால்ஸ் அன்ரனியாக இருக்கட்டும் அவர்களை விட எம்மைத்தானே உன் கையிலே துக்கினீர்கள்.

யார் அநாதைகள் நாங்கள் உலகம் போற்றிய தலைவன் வழர்த்த பிள்ளைகள்.
முடியுமா உங்களால் எதை நாம் சாதிக்கவில்லை.
தாயை பிரிந்த கவளை மட்டுமே
என்றோ ஒரு நாள் எம் தாய் தன்”சேய்களை அனைக்கும் அன்று தெரியும்.

எமை அநாதைகளாக பார்த்த முகங்களுக்கு…!!

எமை 10 மாசதம் சுமக்கவில்லைதான்
ஆனால்
30 வருடம் தன் கைகளிலே ஏந்தி ஒரு எதிரி மதிக்கக்கூடியவாறு வழரத்து விட்டுள்ளார் தலைவர் மாமா.
எமக்கு தாய் தந்தை எல்லாமே அவர்தான்
நாம் சாதிக்கும் சாதனைகள் அத்தனையும் அவருக்கே பெருமை.
எமக்கும் தாய் இருக்கின்றார்.

-ராஜ் யாழ்