யார் சொன்னது எல்லாம் முடிந்ததென்று
யார் சொன்னது
எல்லாம் முடிந்ததென்று
ஆணிவேர் இருக்கின்றது
மாவீரர் சிந்திய குருதியில்
இன்னும் ஈரமிருகின்றது
தழைத்துவிடும் அது
எம் குலக்கொழுந்துகளை
கொன்றொழித்தவனை
கருவருக்காது
கொண்ட இலட்சியத்தை
அடையாது
மரித்துவிடாது அது
மாவீரர் ஈகம் மரிக்கவிடாது
-பிரபாசெழியன்.