யார் தலைவர்???

தேசியத் தலைவர் தனது 16வது வயதினிலேயே சிங்கள காவல்துறையால் தேடப்பட்டதால் தலைமறைவு வாழ்க்கையை கோவில்கள் மடங்கள் பாழடைந்த வீடுகள் தோட்டங்கள் போன்ற இடங்களில் மாறி மாறி தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தார்.

பசிக்கொடுமையால் மரவள்ளி கிழங்கை வேக வைத்து உண்ணக்கூட வழியில்லாமல் பச்சையாக பச்சை மிளகாயுடன் சேர்த்து உண்ண வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

அண்ணை இத்தனை துன்பபட்டது தனது பெயரில் சுவிஸ் வங்கியில் பணம்சேர்ப்பதற்க்கு அல்ல

அண்ணை இத்தனை இடர்களை சந்தித்தது மனைவி பெயரிலோ உடன் பிறப்புகள் பெயரிலோ அசையும் அசையா சொத்துக்கள் வாங்கி குவிப்பதற்கு அல்ல

அண்ணை இத்தனை துயரத்தை தோளில் சுமந்தது மகன் மகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பதவி கேட்டு அல்ல.

உலகில் மற்ற இன மக்கள் எல்லோரையும் போல எங்கட தமிழினமும் சுதந்திரமாக கெளவரமாக பாதுகாப்பாக சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்ற உயர்ந்த உன்னதமான இலட்சியத்திற்காகதான் அண்ணை இத்தனை துன்பங்கள் இடர்கள் சோதனைகள் வேதனைகள் சவால்கள் இழப்புகள் தடைகள் இத்தனைக்கும் முகம் கொடுத்து நெருப்பாற்றில் நீந்தியது.

சமகாலத்தில் பிரபாகரன் என்ற மாமனிதன் மட்டும் இந்த தமிழினத்தில் பிறக்காது இருந்திருந்தால் உலகின் ஒரு மூலையில் தனித்துவமான பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஒழுக்கத்தையும் வீரத்தையும் அறத்தையும் தியாகத்தையும் அர்பணிப்பையும் கொண்ட பழம்பெருமை கொண்டு ஏறத்தாழ உலகையே ஆண்ட தமிழினம் என்றவொரு இனமிருப்பது உலகில் எத்தனைப்பேருக்கு தெரிந்திருக்கும்…

சத்தியத்திற்காக சாக துணி…!!!
பிரபாகரனை நெஞ்சில் ஏந்து…!!!
பிரபாகரனை படி…!!!
பிரபாகரனை பின்பற்று…!!!
பிரபாகரனாகவே மாறு…!!!
பிரபாகரனாகவே வாழ்…!!!

பிரபாகரன் வழி நீ நடந்தால் வாழ்வு உன் வசப்படும்…!!!
பிரபாகரன் வழி நீ நடந்தால் நீ பிரபஞ்சத்தில் பிரபலமாவாய்…!!!
பிரபாகரன் வழி நீ நடந்தால் இமயம் உன் உயரம் காண ஏணி கேட்டு நாணி குனியும்…!!!
பிரபாகரன் வழி நீ நடந்தால் மானுடத்தில் நீ மகுடம் தரிப்பாய்…!!!

பதிவு:-பிரபா செழியன்