யார் வருவார் திரும்பி என்று யார் உணர்வார்…!!!

சொந்த மண்ணே சொர்க்கம் என்றெண்ணி…

பள்ளிப் படிப்பினை பாதியில்
நிறுத்திய எம் இளம்
பிஞ்சு உள்ளங்கள்
சொந்த மண்ணே
சொர்க்கம் என்றெண்ணி
சென்றன அணிதிரண்டு
போர்க்களம் நோக்கி

யார் வருவார் திரும்பி
என்று யார் உணர்வார்

இதை அறியா
சில மனங்கள்
வெட்டிப் பேச்சாலும்
வேதனைச் சொல்லாலும்
வாட்டி வதைக்கின்றனர்.
தூற்றிய கைகளும்
போற்றும் ஓர் நாள்
இந்தச் சிறு
மனங்களை நோக்கி……..

கவியாக்கம்:- சுகந்தன்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”