யாழில் மைத்திரி, ரணில் ஆகியோரின் புகைப்படங்கள் அடித்து நொருக்கப்பட்டன

யாழ்ப்பாண மாவட்டம் கொக்குவில் இந்திரா சனசமூக நிலையம் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாகவும், நூலகத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன், நூலக சுவர்களும் இடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நூலகத்திற்கு முன்னால் தொங்கவிடப்பட்ட மைத்திரி – ரணில் உருவப்படங்களடங்கிய சுவரொட்டிகளும் கிழித்தெறியப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்பவம் தொடர்பாக கொக்குவில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.