யாழ்ப்பாணத்தில் 1.62 வீத நிலப்பரப்பு இன்னமும் இராணுவத்தின் பயன்பாட்டில் – பாதுகாப்புச் செயலர்

karunasena-hettiarachchiயாழ்ப்பாணத்தில் சிறீலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு குறைவடைந்துள்ளதாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் 29.11.16 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றனவா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், எஞ்சியுள்ள நிலங்கள் விடுவிக்கப்படுகின்றன எனத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் 2.2 வீதமான நிலப்பகுதியை தமது தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். அண்மையில் இந்த அளவு, 1.62 வீதமாக குறைந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

(www.eelamalar.com)