யாழ், கிளிநொச்சி பிரபல பாடசாலை மாணவர்கள் இராணுவ பயிற்சியில்!!

சிங்கள மயமாக்கலின் இன்னொரு வடிவமாக தமிழ்ப் பாடசாலை மாணவர்களை சிறிலங்கா இராணுவ பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அரச திணைக்களங்களுக்கு நியமனம் பெறுகின்ற உத்தியோகத்தர்களை தலைமைத்துவப் பயிற்சி எனத் தெரிவித்து இராணுவ முகாம்களுக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இதனிடையே வடக்கு மாகாணத்தின் இரண்டு பாடசாலைகளின் மாணவர்கள் இராணுவப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றமை தொடர்பிலான அதிர்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றாகிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சியின் உருத்திரபுரம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இராணுவப் பயிற்சியில் ஈடுபடுகின்றமை தொடர்பிலான ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை ஏனைய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் பயிற்சிகளுக்கு உள்ளீர்க்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்றுவருவதாகவும் தெரியவருகிறது.

எதிர்காலத்தில் உயர் இராணுவ அதிகாரிகளாக உருவாக மிகப்பெரிய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு மாணவர்கள் இணைக்கப்பட்டுவருவது குறிப்பித்தக்கது.