யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம்
யாழ் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. 32 ஆவது பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு வேந்தர் பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன் நாளையும் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப் பட்டமளிப்பு நிகழ்வில் 2151 மாணவர்கள் பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளனர்.
இதன்படி 164 மாணவர்கள் பட்டபின் தகமை சான்றிதளை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் 1275 மாணவர்கள் உள்ளக மாணவர்களாக பட்டம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
அதேபோன்று 484 மாணவர்கள் வெளிவாரி பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளதுடன் 32 மாணவர்கள் டிப்ளோமா பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளனர்.

(www.eelamalar.com)