யாழ் பல்கலையில் பொங்கு தமிழ் நினைவுத் தூபி

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொங்கு தமிழ் எழுச்சி நாள் நினைவாக பெயர் பலகை அமைக்கப்பட்டிருத்த இடத்தில் புதிதாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக பொங்கு தமிழ் எழுச்சி நாள் இடம்பெற்றது. இந்த பொங்குதமிழ் எழுச்சி நாளை கொண்டாடியமைக்காக யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பல இளைஞர்கள் அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ்த்தேசிய எழுச்சி நாள் நினைவாக பொங்குதமிழ் எழுச்சியில் அளப்பரிய பங்காற்றிய யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுப்பெயர்ப் பலகை ஒன்று வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.