ரவிராஜ் வழக்கு தீர்ப்பில் உடன்பாடு இல்லை : ராஜித

ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு தொடர்பில் தனக்கும் உடன்பாடு இல்லையென சுகாதார அமைச்சரும், அமைச்சரவை  பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலர்கள் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட ரீதியாக வழக்கின் தீர்ப்பு அமைந்துள்ளதாக தோன்றுகிறது.

குறித்த வழக்கினை மேன்முறையீடு செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துவருகின்றார்.

எவ்வாறாயினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கைக்கு ஏற்ப குறித்த வழக்கு விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப் போவதில்லையெனவும், வெளிநாட்டு நீதிபதிகளின் தொழினுட்பம் பயன்டுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.