லசந்தவை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டது யார்?

19-1010ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் பிரதானி ஒருவரே உத்தரவிட்டிருந்ததாக மக்கள் விடுதலை முன்னணிதெரிவித்துள்ளது. நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த கட்சி தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில், கட்சியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

லசந்தவை தானே கொன்றேன் என அண்மையில் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துள்ளமையை சுட்டிக்காட்டிய விஜித ஹேரத், இதன் மூலம் இக்கொலையை இராணுவ புலனாய்வு குழுவொன்றே நடத்தியுள்ளதென்பது தெளிவாகின்றதென குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு பிரிவிற்கு கடந்த ஆட்சிக்காலத்தில் பொறுப்பாக இருந்தவர்களே இக் கொலைக்கு பொறுப்புக்கூற வேண்டுமென்றும், உயர்மட்ட அறிவித்தல்களுக்கு அமையவே குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் பட்சத்திலேயே நாட்டில் நீதி நிலைநாட்டப்படுமென விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

(www.eelamalar.com)