லண்டனின் வட பகுதியிலுள்ள ஒரு மசூதிக்கு அருகில் தாக்குதல்!

லண்டனின் வட பகுதியிலுள்ள ஒரு மசூதிக்கு அருகில், தொழுகை முடிந்து வந்தவர்கள் மீது, வாகனம் மோதியதில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரிட்டன் நேரப்படி நள்ளிரவு தாண்டிய சற்று நேரத்தில், ஃபின்ஸ்பரி பூங்கா மசூதிக்கு அருகில், முஸ்லிம் நலவாழ்வு இல்லத்திற்கு வெளியே, நடை பாதையில் ஏறிய அந்த வாகனம் மக்கள் மீது மோதியது.

48 வயதான ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.