லண்டனில் இலங்கை இளைஞனை கொலை செய்த தமிழன்: நேரில் கண்ட பெண்!!

பிரிட்டனில் இலங்கை இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் மற்றுமொரு தமிழர் தொடர்புபட்டுள்ளதாக லண்டன் பொலிசார் கூறியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் வைத்து இலங்கையை சேர்ந்த 28 வயதான அருனேஷ் தங்கராஜா என்ற இளைஞன் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைச் சம்பவத்துடன் மணிமாறன் செல்லையா என்ற 44 வயதுடைய தமிழரை லண்டன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை மணிமாறன் என்பவர் ஏற்கனவே 35 வயதான நபர் ஒருவரின் உடலில் காயம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவரை நேற்று Wimbledon நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் இன ரீதியாக தாக்குதல் அல்லவென பொலிஸ் தலைமை ஆய்வாளார் Simon Harding கூறியுள்ளார்.

அருனேஷ் தங்கராஜா கொலை செய்யப்பட்டு 48 மணித்தியாலத்திற்குள் லண்டனில் மற்றுமொரு நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய நேரப்படி நேற்று முன்தினம் மாலை வடக்கு லண்டன் Islington பகுதியில் இடம்பெற்ற இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

இதேவேளை இச் சம்பவத்தை அங்கிருந்த இளம் பெண் உட்பட பலர் நேரில் பார்த்துள்ளனர்.

கத்தியால் குத்திய நபர் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சியை பலர் பார்த்துள்ளதாக தெரியவருகிறது.

எனினும் குறித்த நபர் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளாரா என்பது தொடர்பில் இன்னமும் உறுதியாகவில்லை.

இந்த கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.