லண்டனில் உணர்வுடன் நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள்….!

மே மாதம் 18ஆம் திகதி 2009இல் முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் இலங்கை இனவெறி சிங்கள அரசினாலும் பன்னாட்டு அரசுகளின் சதிகளினாலும் அழிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துவிட்டது. 10ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நாள் நேற்று (18/05/2019) லண்டனில் மிகவும் உணர்வுடன் நினைவு கூரப்பட்டது.

லண்டன் Green Park, Stratton Street இல் பிற்பகல் 3 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமான பேரணி லண்டனிலுள்ள பல பிரதானமான பாதையினூடாகச் சென்று பிரித்தானியப் பாராளுமன்றச் சதுர்கத்தை மாலை 4.45 ம‌ணியள‌வி‌ல் சென்றடைந்தது. இப்பேரணியில் 5,000க்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டு அவர்களது கோசங்களை எழுப்பினர்.

பாராளுமன்றச் சதுர்கத்தில் 5 ம‌ணியள‌வி‌ல் பிரித்தானிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றலுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமானது. அங்கு எழுச்சி நடனங்கள், பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகள், தமிழ் உணர்வாளர்களின் உரைகள் போன்றன இடம்பெற்றது.