லெப். கேணல் நவம் அறிவுக்கூடம்.!

லெப் கேணல் நவம் அவர்களின் நினைவாக தேசியத் தலைவர் அவர்களினால் உருவாக்க்கப்பட்டது.. தாயக மீட்பு போரிலே அங்கவீனமான போராளிகளைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களின் செயல்திறண்களை மேம்படுத்தவும் உருவாகிய செயற்திறண்மிக்க செயற்களம்..
லெப் கேணல் நவம் அவர்கள் போராட்டத்திலே தனது ஒரு கரத்தினை இழந்தவர்.

இவ் நவம் அறிவுக்கூடத்திலே இருந்த போராளிகள் எமது தாயக விடிவிற்கான போராட்டத்திலே பங்களித்து தம் அங்கங்களை இழந்தும் அல்லது முழுமையாக அங்கங்கள் செயற்படாது இருந்த போதிலும் தொடர்ந்தும் இறுதிவரை தாயகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் எனும் துடிப்புடன் பயணித்தவர்கள்…
இன்றும்..
காலங்கள் மாறினும் 
காட்சிகள் மாறினும்…
என்றுமே மறவாத 
நிறைவான நாட்களவை..!
****** ******* ********
வரும் நாட்களில் அப்படியானதொரு அமைவிடம் தாயகத்தில் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாய தேவை…
கூடு கலைந்து திசைக்கொன்றாய் சிதறிய சிறகிழந்த அப்பறவைகளிற்கு சிறு மன அமைதியை கொடுக்கும் அரிய பணியாக இது இருக்கும்..
அவர்தம் உயிர் வலியையும் அது போக்கும்…
சாத்தியமான வழியுண்டு..
சிந்திப்போம்..