வட மத்திய மாகாண சபை உறுப்பினராக சமந்த

வட மத்திய மாகாண சபையில் நிலவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு என்.வி.சமந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

அம் மாகாண சபை தலைவராக இருந்த ஆனந்த சரத்குமார ரத்நாயக்க காலமானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண சபை செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கிய அறிவித்தலை அடுத்து, கூட்டமைப்பின் பொதுச் செயலாளரால் இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.