‘வருவான் பிரபாகரன் மீண்டும்’ உள்ளக் கிடக்கை வெளிப்படுத்திய போராட்டக் காரர்கள்!

சுழிபுரம்- காட்டுபுலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரப் பகுதியில் (29.06.18) மக்களும், மாணவர்களும் ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கனை பிரதேசசெயலகம் வரை பேரணியாக போராட்டக்காரர்கள் சென்றனர்.

கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், அரச சார்பற்ற சி நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்ட போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

சங்கானை பிரதேச செயலரிடம் மனு கையளிப்பதற்காக போராட்டக்காரர்கள் சென்றனர். இதன்போது, “வருவான் பிரபாகரன்“ என்ற கோசங்களைளும் அவர்கள் எழுப்பினர்.

போராட்டக்காரர்களிற்கும், காவல்துறையினர்ககும் இடையில் ஆங்காங்கே முறுகல் ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.