வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம்…
16/11/2019

இலங்கை இராணுவத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக, தாயகத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வரும் கார்த்திகை 16 ஆம் திகதி 1000வது நாளை தொடுகின்றது.

1000 நாட்களாக இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தொடரும் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக
கார்த்திகை 16, 2019 (Saturday)அன்று மதியம் 12.30 முதல் 15.30 வரை, 10 Downing Street, London, SW1A2AA இல் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.

இதற்கான பிரச்சார பணிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவில் (10/11/2019) ஞாயிற்றுக்கிழமை நேரம் 12pm மணிமுதல் 5pm மணி வரை தமிழர்கள் வாழும் பல பகுதிகளில் நடைபெற்றது.

முக்கியமாக தமிழர் கடைகள், தமிழ் மக்கள் கூடும் இடங்களை மையப்படுத்தி இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியிலும் ஏனைய இனத்தவர்களின் மத்தியிலும் இப்பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தமை காணக்கூடியதாக இருந்தது.

நாடு கடந்த தமிழீழ செயற்பாட்டாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் தமிழ் மக்கள் செரிந்து வாழும் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.