வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி அலைந்த 19 ஆவது தாயும் உயிரிழந்தார்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தகாலப்பகுதி மற்றும் இறுதி யுத்தகாலப்பகுதி மற்றும் யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை தேடி உறவுகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்ததோடு தற்போது கடந்த 2017 ம் வருடம் மாசிமாதம் முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்

இந்தவகையில் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்ததன் பின்னர் பிள்ளைகளை இழந்து பிள்ளைகளை தேடி பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி வரும் பெற்றோர் பலர் நோய் வாய்ப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனது பிள்ளையை தேடி போராடிவந்த தேவிபுரம் அ பகுதியை சேர்ந்த சண்முகராசா விஜயலட்சுமி அவர்கள் 7.1.2019 அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்

இவரோடு இன்றுவரை 19 தாய் தந்தையர்கள் உயிரிழந்துள்ளனர்

தனது கணவனை 1995 ம் ஆண்டு இழந்த சண்முகராசா விஜயலட்சுமி இரண்டு பிள்ளைகளை தான் கஸ்ரப்பட்டு உழைத்து வளர்த்து வந்த நிலையில் கடந்த யுத்த காலத்தில் 2009 ம் ஆண்டு வலைஞர்மடம் பகுதியில் தனது மகனை தவறவிட்ட குறித்த தாய் கணவனால் கைவிடப்பட்ட தனது மூத்த மக்கள் மற்றும் மக்களினுடைய 6 வயது மகன் உள்ளிட்டவர்களுடன் சொல்லுனா துன்பங்களை அனுபவித்து வீடு கூட இல்லாது ஒரு தற்காலிக கூடாரத்தில் மிகுந்த கஸ்ரத்தில் வாழ்ந்துவந்தார்

இந்நிலையில் இழந்து பிள்ளைகளை தேடி பல்வேறு போராட்டங்களோடு மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த இந்த தாய் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு 4.1.2019 அன்று சுகயீனம் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது 7.1.2019 அன்று மரணமடைந்துள்ளார்

இந்நிலையில் இவரது இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளது தற்போது இந்த மகனை தேடுவது யார்? கணவனால் கைவிடப்பட்ட அவருடைய மூத்த மக்கள் மற்றும் மக்களினுடைய 6 வயது மகன் உள்ளிட்டவர்களது நிலை என்ன? இவ்வாறான கேள்விகளுடன் விடைபெற்ற தாய்க்கு அரசு கூறும் பதில் என்ன என்பது அவருடைய உறவுகளின் கேள்வியாக உள்ளது