வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தில் பாரிய போராட்டம்: அனைவரும் அணிதிரள அழைப்பு…!

2009ம் ஆண்டு இறுதி போாில் உயிருடன் படையினாிடம் ஒப்படைக்கப்பட்ட எங்களுடைய உறவினா்கள் உயிருடன் இருக்க வேண்டும். அவா்களுடைய மீட்புக்காக சா்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோா் தினத்தில் ஓமந்தை மற்றும் கல்முனை பகுதிகளில் இம்மாதம் 30ம் திகதி கவனயீா்ப்பு போராட்டத்தை நடாத்தவுள்ளோம்.

மேற்கண்டவாறு வடகிழக்கு மாகாணங்களை சோ்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கூறியுள்ள னா். மேற்படி விடயம் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறும்போதே அவா்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனா்.

இதன்போதே மேலும் அவா்கள் கூறுகையில், ஓமந்தை மற்றும் வட்டுவாகல், கல்முனை பகுதிகளில் போாின் இறுதியில் படையினா் கூறியதற்கு அமைய உயிருடன் எங்களுடைய பிள்ளைகளை, உறவுகளை ஒப்படைத்தோம். ஒப்படைக்கும்போது அவா்கள் உயிருடன் இருந்தாா்கள். அவா்களை பேருந்துகளில் கொண்டு சென்றாா்கள்.

அவா்கள் எங்கே? அவா்கள் எமக்கு வேண்டும். போா் நிறைவடைந்த 10 வருடங்களின் பின்னும் அரசாங்கம் அவா்கள் தொடா்பாக எந்தவொரு தகவலையும் எங்களுக்கு கூறவில்லை. எனவே நாங்கள் கொண்டு சென்று ஒப்படைத்த எங்களுடைய உறவினா்கள் எங்கே? அவா்களை வெளிப்படுத்துங்கள் எனகேட்டு நாங்கள் எங்கள் உறவுகளை ஒப்படைத்த

ஓமந்தை மற்றும் கல்முனையில், சா்வதேச காணாமல் ஆக்கப்பட்டோா் தினத்தை ஒட்டியதாக இந்த பாாிய கவனயீா்ப்பு போராட்டத்தை நாங்கள் நடாத்தவு ள்ளோம். இதில் பல்கலைக்கழக மாணவா்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடாத்த ஒத்துழைக்கவேண்டும். என தயவாக கேட்டுள் கொள்கின்றோம் என்றனா்.