வாழ்வதெனில் தமிழனாக தலைவரின் பிள்ளையாக…!!

தீயின்
புதல்வர்கள்
உறங்குதல் 
முறையா..!

சிறுத்தையின்
மீசையில்
சிலந்தியின்
வலையா..!

திமிரி ஏழு
திருப்பி அடி..!

பற்றியெறிந்த தீயில்
பச்சிளம் குழந்தை
வெந்ததை வேடிக்கை
பார்த்தது நன்முறையாயின்
பற்றவைப்பதெப்படி
வன்முறையாகும்..?

சின்ன சின்ன
திப்பொறிகள்
திக்கெட்டும்
சேர்வோம்
பெருநெருப்பாவோம்
பற்றியெறியட்டும்
பாவிகளின்
கூடாரம்..!

தூங்கியெழுந்த
இடத்தை
சுடுகாடாய் மாற்றியவனை
பாடையில் ஏற்றாமல்
பல்லக்கு தூக்குவதோ..!

திமிரி எழு
திருப்பி அடி….!

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
-பிரபா செழியன்.