விக்கியோடு இணைந்து அரசாங்கமும் மக்களை குழப்புகின்றனர்!

02-10-08அரசாங்கமும் வடக்கு முதலமைச்சரும் இணைந்து இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நேற்று அவன்கார்ட் வழக்கு விசாரணையை அவதானிக்கவென கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு சென்றிருந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சர் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அதேபோல் அரசாங்கமும் ஒன்றும் செய்யவில்லை. இது தொடர்பாக மக்கள் எதிர்ப்புகள் வரும் போது மக்களை திசை திருப்பி இனவாதத்தை தூண்டி மக்களை குழப்ப அவரும் அரசாங்கமும் சேர்ந்து செயற்படுகின்றனர். என அவர் தெரிவித்துள்ளார்.

(www.eelamalar.com)