தமிழர்களால் இயற்றப்பட்ட “தமிழீழ குற்றவியல் நடைமுறைச் சட்டம்”
விடுதலைப்புலிகள் ஈழத்தில் பலமான நிலையில் இருந்த போது, ஈழத்தில் அவர்கள் தமிழீழ போலிஸ், தமிழீழ வைப்பகம், நீதித்துறை என பல மக்கள் கட்டுமான அமைப்புகளை தோற்றுவித்து அவற்றை திறம்பட நடத்தி வந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே
இந்த வகையில் புலிகள் அவர்களுடைய நீதித்துறைக்கு இலங்கையின் பிற பகுதிகளில் சிங்கள ஆட்சியாலரகளினால் பின்பற்றப்பட்ட சட்டங்களை பயன்படுத்தவில்லை. மாறாக அவர்கள் தமக்கென்று தனியான ஒரு குற்றவியல் சட்டமுறையினை எழுதி அதையே அவர்களின் காவல்துறை, மற்றும் நீதிமன்றங்களில் பயன்படுத்தி வந்தனர். இது உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய ஏனெனில், இலங்கை, இந்தியா போன்ற பெரும்பாலான நாடுகளில் ஆங்கிலேயே ஆட்சியில் நடைமுறையில் இருந்த சட்டவிதிமுறைகளியே சிறிய மாற்றங்கள் செய்து பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், புலிகளோ தமிழர்களுக்கென்று ஒரு தனியான சட்டபுத்தகத்தையெ உருவாக்கி இருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. அதுவும் இந்த சட்ட புத்தகம் எழுதப்பட்ட காலப்பகுதி ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில் கூட ஒருபுறம் போர்க்களத்தையும் மறுபுறம் எமது இனத்திற்கு பெருமை சேர்க்கக் கூடிய பல கட்டுமானங்களை புலிகள் ஈழத்தில் உருவாக்கி இருப்பது தேசியத் தலைவர் அவர்களின் தூர நோக்குடைய சிந்தனையை தெளிவு படுத்துகின்றது.
புலிகளின் சட்டத்தின் படி பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. அவர்களின் சட்டத்தின் படி மரண தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்கள்
1.பாலியல் வல்லுறவு
2.தேசத்துரோகம்