13873250_158540781243556_3586424362243317702_n

விடுதலைப்புலிகளின் பலமானான்
தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான்

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
மங்கலம் தங்கிடும் நேரத்திலே
எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே
பாசத்தில் எங்களுக்கு தாயானான்
கவி பாடிடும் மாபெரும் பெயரானான்.

தேசத்தில் நிலையானான்
விலை தேடி வந்திடும் தலையானான்
இன்னல்கள் கண்டு கொதித்தான்
பல இளைஞரை சேர்த்து களம் குதித்தான்.
தன்னின மானத்தை தான் மதித்தான்.
பகை தாவியே வந்திட கால் மிதித்தான்.
தாயகம் அவனின் மூச்சு என்றான்.
தமிழீழமே அவன் பேச்சு என்றான்.

வந்திடும் படைகளை வீசு என்றான்.
புலி பாய்திடும் வரையினில் தூசு என்றான்.
விடுதலைப்புலிகளின் பலமானான்.
தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான்.
படுகளம் மீதிலோர் புலியானான்.
பிரபாகரன் எங்களின் உயிரானான்.
என்றுமே எங்களின் தளபதியே.
நீ எங்களின் வானத்து வளர்மதியே.
இன்று நமக்கு ஆயிரம் சோதனைகள்.
தமிழீழத்தை வாங்கும் உன் போதனைகள்.

(www.eelamalar.com)