விடுதலைப் புலிகளை அழிப்பதில் ஈடுபட்ட இந்தியாவும், தடுமாறிய லம்பாவும்!

தமிழ்நாடு அரக்கோணத்திலமைந்துள்ள ராஜாளி கடற்படைத் தளத்தின் வெள்ளிவிழா கடந்த கிழமை நடைபெற்றபோது அதில் சிறப்புவிருந்தினராக இந்தியக் கடற்படைத் தளபதி கலந்துகொண்டு உரையாற்றினார்.

இவ்விழாவின் ஒரு கட்ட நிகழ்வாக நீண்டகாலம் கடற்படை சேவையில் ஈடுபடுத்தப்பட்ட ரியு 143எம் என்ற விமானங்களுக்கு ஓய்வும் அளிக்கப்பட்டது. இதன்போது, இந்தியக் கடற்படைத் தளபதி சுனில் லம்பா உரையாற்றினார்.

அவரின் உரையின்போது, இவ்வகை விமானங்கள் இலங்கையில் யுத்தம் நடைபெற்றபோது இலங்கைக் கடற்பரப்பைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன எனத் தெரிவித்தவர் சற்று நேரத்தில் தான் கூறியது 1990ஆம் ஆண்டளவிலேயே இவை இலங்கைக் கடற்பரப்பைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும், அது இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியெனவும் தெரிவித்தார்.

லம்பாவின் இந்தக் கருத்தை நிராகரித்த இந்திய நிபுணர்கள், இறுதிக்கட்டப் போரின்போதே இது நடைபெற்றதாகவும், இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகள் தப்பிச் செல்லக்கூடாது என்ற காரணத்தினால் இவ்விமானங்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

(www.eelamalar.com)