விடுவிக்கப்பட்ட பகுதிகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்!

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து இன்று விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் சிங்கள மன்னர்களின் வரலாற்றுப் படங்கள் சிற்பங்களாக வரைப்பட்டிருந்தன.

காணியில் வளர்ந்த அரச மரத்தில் புத்தர் சிலை வைத்து வணங்கியுள்ளனர். எனினும் புத்தரை அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்.

சிங்களப்படையினர் பாவனையில் இருந்த மக்களின் வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்களை பதித்துள்ளதுடன் வரைந்தும் உள்ளார்கள் சிங்கள ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தினை வெளிப்படுத்தும் சிற்பங்களாக அவைகாணப்படுகின்றன