விடைபெறும் மூன்

ஐக்கிய நாடுகள் சபையின் 8ஆவது பொதுச் செயலாளர் பான் கீ மூன் 31.12.16 தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றார். 2007ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 8வது பொதுச் செயலாளராக பதவியேற்ற பான் கீ மூனின் பதவிகாலம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் 9வது பொதுச் செயலாளராக போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டானியோ கட்டேரஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 12ம் திகதி பதவியேற்ற இவர், 01.01.2017 முதல் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

(www.eelamalar.com)