வீட்டுக்கொரு வீரன் தாய் நாட்டை காத்த பெருமை எம் தமிழினத்தையே சேரும்…!!

சிரு துண்பம் துக்கம் கவலை என்று அன்று வந்தது இல்லையே..!!
மரணத்தைப்பற்றி யோசித்தோமா..!!
கிளித்தட்டு விளையாட்டு போல் செங்களம் ஆடியல்லோ மகிழ்ந்தோம்..!!
பனைமர”நிழலிலே இழைப்பாரி
பசி தீர்த்து தாய் மண் காக்க நித்திரை இன்றி எம்மை நம்பி ஒரு இனமே காத்துக்கொண்டு இருக்கின்றது வெற்றிச்செய்திக்காக என்று வந்தவன் தலையை பந்தாடி சாய்த்தபோது தெரியவில்லையே இப்போது இருக்கின்ற கஷ்ட துண்ங்கள்…!!

காயப்பட்டு சென்றாலும் மீண்டும் களமுனை எப்போது செல்வேன் என்று காத்திருந்த காலம் இனி எப்போது என் கண்முன்னே வரும்..!!

காதோடு ஒரு சேதீ சொல்லி போனவர் நாம்..!!
காலம் மாறிப்போகும் என்று எப்போதாவது என்னியதுண்டா..!!

அண்ணன் சொன்ன வேதம்
இன்றும் நம்பிக்கையை சாய்த்து விடவில்லை..!!

எமக்காக மடிந்தவரின் கடனை தீர்க்கும் நாளை எண்ணி எத்தனை எத்தனை உயிர்கள் தாகத்தோடு காத்துக்கொண்டு இருக்கின்றது
என்றோ ஓர் நாள் நெருப்பாய் சீரும்..

ராஜ் யாழ்