வீரம் செறிந்த இந்த மண்ணே என் மகனின் நினைவாக…!

“தேசாபிமான உணர்வானது மக்களை ஆழமாகப் பற்றிக்கொள்ளும்போதுதான் ஒருதேசம் தனக்கே உரித்தான தனித்துவமான ஆளுமையைப்பெறுகின்றது.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

நீ கருவறையில் இருக்கும்போது சிங்கள ஆதிக்கத்தின் கொடூரம் என்னை விடவில்லை………………………..

இன்றோ நீ நாட்டுக்காக உயிர்கொடுத்து தூங்கும்போதும் சிங்கள அகங்காரம் உன்னை இவர்கள் விடவில்லை என………………………………..

அந்த மாவீரனின் தாய் புலம்பி புலம்பி அழுதாள் அழுதுகொண்டே இருக்கிறாள்.

அந்த மாவீரனுக்கு தேசம் வழங்கிய வீரத்தின் மகுடம் சூட்டிய அந்த கல்லறை மீதில் பொறிக்கப்பட்ட வாசகமும் இல்லை நினைவுக் கல்லறையும் அங்கு இல்லை.

தன் பிள்ளை வீரத்தூயில் கொள்ளும் துயிலுமில்ல கோவில் சிங்கள காடையானால் இடிக்கப்பட்டது.

அந்த காவியங்கள் உறங்கும் வீரத்தின் சோலைகள் இன்று இல்லை ஆனால் அன்று எங்கள் உணர்ச்சிப் புலவன் காசி ஆனந்தன் வரித்து எடுத்த வரி போன்று “மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைக்குமையா” கருவறை சுமந்தவளும் அந்த நினைவுக்கல்லின் மையத்தை நினைவில் கொண்டு சென்றாள்.

தாய் தன பிள்ளையை நனைத்து உச்சி முகர்ந்து தாலாட்டி சீராட்டி வளைப்பது போன்று அந்த தாயும் மாவீரன் வரலாறாய் பதிந்த அந்த இடத்தில் குப்பற விழுந்து அழுதாள். அவளின் மனவலியை புரியாத கூட்டம் அப்போது அங்கே கூடியது, அவர்களின் கரங்களில் துப்பாக்கி தரித்து இரையை சூறையாட சுற்றும் ஓநாய்கள் போன்று சிங்கள இனவெறி காடையர்கள் வட்டமிட்டபடி…

அந்த தாய் வீராவேசத்துடன். தன்னை சூழ்ந்துள்ள அடக்குமுறையில் பேய்களுக்கும் அஞ்சாமல் தொடர்ந்தாள்……….

அந்த வீரம் எல்லோருக்கும் வராது, அந்த தாய் நம் இனம் வணங்கும் ஒரு வீரமகவை பெற்றவள் ஆயிற்றே.

புராணங்களில் பொங்கிய பல பெண்கள் போன்று இந்த வையகத்தில் அங்கு அந்த வீரங்கள் உங்களும் வீரத்துயிலறை வனாந்தரத்தில் பொங்கினாள்.

மண்ணை சிங்கள காடையர்கள் மேல் தூற்றி சாபம் விட்டபடி கொஞ்ச மண்ணை கடகத்தில் அள்ளி தலையில் தூக்கி சுமந்தபடி வீடு நோக்கி சென்றாள்………..

வீட்டுக்குள் சென்றவள் வெளியே வந்து முற்றத்தில் பூத்திருந்த மலர்களை கொய்து உள்ளே சென்றால் அப்போது சில விழிகள் அகலத் திறந்து தாயின் செயலைப் பார்த்து வியந்தது. அவர்களை அறியாமல் விழிகளின் ஓரம் நீர் கசிந்தது. சாமி குடியிருக்கும் அந்த அறையில் சாமியாக அந்தத் தாயின் மகனே இன்று………..

அப்போது கூறினாள் அந்தத் தாய்…………………

என் மகனின் படமும் இல்லை அவன் நினைவும் இறுதியாக விதையாக அவனின் உடல் புதையுண்ட வீரம் செறிந்த இந்த மண்ணே அவனின் நினைவாக என்னிடம் இன்று…………

“சத்தியத்திற்காக சாகத் துணிந்துவிட்டால், ஒரு சாதாரண மனிதப்பிறவியும் சரித்திரத்தை படைக்கமுடியும்.”
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

அவள் போல் ஆயிரம் தாய் தந்தையர், உறவினர்கள் தயவுசெய்து மாவீரர் காவியங்களை பாதுகாப்போம்.

வரலாறுகள் யாருக்காகவும் மாறாது.

எமக்கான வரலாறு
எமது மண்
எமது தமிழீழத் தேசியத் தலைவர்
மாவீரர்கள், தியாகிகள், தேச உணர்வாளர்கள்……………

என்றும் நினைவுகளுடன்
அ.ம.இசைவழுதி.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”