வெகுவிரைவில் நாட்டில் மாற்றம் வரும் – ஜனாதிபதி அறிவிப்பு!

தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்த சில நாட்களுக்குள் நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை சுதந்திரக் கட்சிக்கு ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைவதற்கான முயற்சிகளில் அதிருப்தியடைந்த அமைச்சர்கள் சிலர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்படியான நிலையில் அடுத்தகட்ட நகர்வு, அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அனைத்து அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தன்னை சந்திக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் பிரகாரம் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தின் போது, தேர்தல் முடிவுகளின் பின்னர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கூறினார் என தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.