09/02/18 லண்டனில் மாபெரும் போராட்டம். புலம்பெயர் தமிழர் அனைவருக்கும் அழைப்பு…

வெள்ளிக்கிழமை 09/02/18  லண்டனில் மாபெரும் போராட்ட பேரணி பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடைபெற இருக்கின்றது.

இலங்கை தூதரகத்திலிருந்து லண்டன் காமன்வெல்த் அலுவலகம் வரை நடை பெற இருக்கின்றது.
இலங்கை தூதரகம் முன்னால் 2மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆனாது ஆரம்பிக்கபட உள்ளது.

மேலதிக விபரங்கள் விரைவில்.

தொடர்புகளுக்கு.
மதன்- 07454471030
சதா- 07466 103263
செல்வா -07496108923
மணிவண்ணன் – 07869 133073லண்டனில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்து பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சிங்கள இராணுவ அதிகாரி ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய  புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததை எதிர்த்து அவரின் அச்சுறுத்தலுக்கு கண்டனம் மற்றும் அவருக்கான சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பிரித்தானிய அரசை வலியுறுத்தியும் மற்றும் இலங்கை அரசின் கபடகரமான உண்மை நிலையை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் அனைத்து பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழர்களும் இப் போராட்டத்தில் ஒண்றிணைய வேண்டும்…

ஒண்றிணைவீர்களா எமது எங்கள் உறவுகளே…

ஒற்றுமையே எமது பலம்…
  • சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.
  • ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்;றது.
  • எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.