2017 ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த புகைப்படம்!

ஆசியா முழுவதும் 5 ஆயிரம் புகைப்படங்களில் இருந்து சிறந்த புகைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் யானைகளுக்கு விளைவிக்கும் தீங்குகளைத் தத்துரூபமாகப் படம் பிடித்த வன உயிரினப் புகைப்படக் கலைஞர் பிப்லா ஹஸ்ராவின் புகைப்படம் தெரிவு செய்யப்பட்டு, அவருக்கான விருதை மும்பையைச் சேர்ந்த Sanctuary Nature Foundation அமைப்பு வழங்கியுள்ளது.

மேற்கு வங்கம் பங்குரா மாவட்டத்தில் குட்டியுடன் தாய் யானை சாலையைக் கடக்கும்போது, அதன்மீது கும்பல் ஒன்று நெருப்பைக் கொளுத்திப் போடுகிறது. அதில், குட்டி யானையின் உடல் தீப்பற்றி எரிகிறது. இந்தக் காட்சியை பிப்லா புகைப்படமாகப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.