2 (1)

300 போராளிகளோடு ஊடறுக்க முனைந்த தலைவர்- அதில் தப்பியது யார்: தமிழினி சொல்லிய தகவல் என்ன ?

புலிகளின் மகளீர் அணிப் பொறுப்பாளராக இருந்து. பின்னர் ராணுவத்திடம் சரணடைந்து இறுதியாக புற்றுநோயால் இறந்துபோன தமிழினி ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து என்ற புத்தகத்தை எழுதி இருந்தார். இதில் அவர் சொல்லவந்த கருத்தை திரித்து பல, உள்ளடக்கங்களை சிங்கள புலனாய்வு துறை உட்புகுத்தியது யாவரும் அறிந்ததே. இன் நிலையில் புலிகளின் தலைவர் 300 போராளிகளோடு , கேப்பாபிலவு காட்டுக்குள் தப்ப முயன்றார்கள் என்றும். பின்னர் அவர்கள், வட்டுவாகல் ஊடாக தப்பிக்க முனைந்தார்கள் என்றும் எழுதியுள்ளார்.

3 அடுக்குகளாக பாதுகாப்பு போடப்பட்டு , நடு பாதுகாப்பு அடுக்கில் தலைவரை நிறுத்தியே தாக்குதல் நடந்துள்ளது. சுமார் 20,000 ஆயிரம் படைகள் சூழ்ந்திருந்த நிலையில் இத்தாக்குதல் நடைபெற்று ஊடறுப்பு இடம்பெற்றுள்ளது. முதல் அடுக்கு பாதுகாப்பில் இருந்த இந்த 100 பேரில் சில போராளிகள் தற்போது இந்தியாவில் இருப்பதாகவும். இவர்களில் சிலர் 2009ம் ஆண்டு மே மாதமே சென்னையில் , உணர்வாளர் வைகோ அவர்களை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பல தமிழ் உணர்வாளர்களை இப்போராளிகள் சந்தித்துள்ளார்கள்.

ஆனால் அவர்கள் தெரிவிக்கும் கருத்து என்னவேன்றால், முதலாம் அடுக்கு பாதுகாப்பில் இருந்த நாமே தப்பி வந்துவிட்டோம். 2ம் அடுக்கு மற்றும் 3ம் அடுக்கில் இருந்த போராளிகள் மற்றும் அவர்களோடு சென்றவர்கள் நிச்சயம் தப்பி இருப்பார்கள் என்பது தான். ஆனால் இலங்கை ராணுவத்தை பொறுத்தவரை , அவர்களுக்கு புலிகள் போட்ட முழுத் திட்டமும் தெரிந்து இருந்தது என்கிறார்கள்.

இதனால் 2ம் அடுக்கில் மற்றும் 3ம் அடுக்கில் தான் முக்கிய புள்ளிகள் உள்ளார்கள் என்று முன்னரே தெரிந்து இருந்ததால், இலங்கை ராணுவம் அந்த அணி மீது தான் கடுமையான தாக்குதலை தொடுத்து இருக்கிறது. எது எவ்வாறாயினும் , 300 போராளிகள் சகிதம் தலைவர் ஊடறுப்பு யுத்தம் ஒன்றும் இறுதி நாட்களில் ஈடுபட்டு தப்பியுள்ளார் என்பதனை தமிழினி தனது புத்தகமூடாக உறுதிசெய்துள்ளார்.

(www.eelamalar.com)