அடங்கிக்கிடந்த வடக்கு முதல்வர் ஆட்டம்போடுகிறார் – முன்னாள் கடற்படைத் தளபதி

மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் அடங்கிக் கிடந்த வடமாகாண முதல்வர் புதிய ஆட்சியில் தனது பதவியையும் அதிகாரத்தையும் வைத்து நாட்டுக்குப் பொருந்தாத சட்ட மூலங்களை இயற்றிக்கொள்கிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் கடற்படைத் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான சரத் வீரசேகர

‘எலிய’ அமைப்பின் ஊடகச் சந்திப்பொன்றின்போது பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“உலகிலேயே, அரசு முன்வைத்த ஒரு வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்த ஒரே எதிர்க்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பாகத்தான் இருக்கும். ஒருவேளை, தனிநாட்டுக் கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னகர்த்தினால் தற்போதைய அரசும் வேறு கதையேயின்றி அதை அங்கீகரிக்கும். இதற்காக நாட்டையோ, நாட்டு மக்களையோ காட்டிக் கொடுக்கவும் தற்போதைய அரசு தயங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்பட முன்னதாக வடபகுதியில் வசித்து வந்த பௌத்த, முஸ்லிம் மக்களை அங்கு மீளக் குடியமர்த்த வேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்